கல்வித்துறையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
வேத காலங்களில் கல்வி என்பது ஒரு சில சமூகத்தால் மட்டுமே கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றை இருந்தது அப்பொழுது கல்வி கற்பது என்பது ஏக்கமாக இருந்தது பின்னர் அறிவியலின் எழுச்சி காரணமாக அது அறிவை உருவாக்கும் அல்லது வளர்க்கும் ஒரு முறையாக மாறியது.
பலரும் கல்வி கற்றனர் பல இனக்குழுக்கள் பல்வேறு படிநிலையில் உள்ள மக்கள் இணைந்து கல்வியும் அதனுள் உள்ள அறிவியலையும் கற்றனர். இதனால் பல்வேறு ஏழை குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்கமுடிந்தது
அதற்க்கு பிறகு கல்வி என்பது வேலை பெற்றுக்கொள்ளும் ஒரு வணிகமாக பார்க்கப்பட்டது, இதிலும் பல்வேறு மாற்றங்களும் நிகழ்ந்தன பல்வேறு வகையான கல்விகள் அந்த தொழிலுக்கு வேலை அல்லது அறிவை பெறக்கூடிய கல்வியாக பார்க்கப்பட்டன.
பல்வேறு உயர்கல்வியில் மேலான்மைப்படிப்புகள் என்று பல்வேறு வகைகளை அவை உருவாகிவிட்டன
பின்னர் கல்வியென்பது ஒரு அடிப்படை தேவையாக உருவாகிவிட்டது ஆனால் இவையெல்லாம் கல்வியின் வளர்ச்சி மட்டுமே
அறிவியலின் கண்டுபிடுப்பு காரணமாக கல்விமுறையில் முற்றிலும் மாறிவிட்டன அரிசி பருப்புக்காக சொல்லிக்கொடுத்தவர்கள் அரசமரத்தடியில் போதனையாக மாறியது பின்னர் பிழைப்பிற்காக சொல்லிக்கொடுத்தவர்கள் இருந்தார்கள்
பின்னர் அது சிலர்க்கு வாழ்கை முறையாக மாறியது பின்னர் தனியார் பங்களிப்பு அதிகம் வந்தது அதில் கல்வியென்பது தொழில் ஆக மாறியது இவை அறிவியல் மற்றும் தகவல் தொழிநுட்பபுரட்சியாக வியாபாரமாக மாறியது
இப்படி மாறுவதில் என்பதில் எந்த தவறும் இல்லை ஆனால் அன்று ஆழமாக கற்றகல்வி பணிப்புல் நுனிப்புல் மேய்ந்தது போல் உள்ளது.
கல்வியை சார்ந்து கற்பிக்கப்பட்ட ஒழுக்கம், விடாமுயற்சி, நிர்வாகம், விளையாட்டு, விட்டு கொடுத்தல், சாமர்த்தியம், கூட்டுஇயக்கம், கற்பனை
இவை போன்ற அணைத்து அடிப்படை கூறுகளையும் கல்வி இழந்து விட்டது இப்படி உள்ள கல்வியினால் யாருக்கு என்ன பலன் இந்த கல்வியை கற்காமலேயே இருக்கலாம்.
இதனால் சமூகத்திற்கு என்ன பயன் சமூகத்திற்குத்தான் பயன் இல்லை என்றாலும் கட்டறவர்க்கும் கூட பயனில்லை அவர்க்கு போதிய வேலைக்கு செல்லும் அளவுக்கு கூட தகுதியை உருவாக்கவில்லை.
பலர் அடிப்படை அறிவின்றியும் வேலை வாய்ப்பின்றியும் இருக்கின்றனர் இப்படி பட்ட கல்வித்தேவை தான யார்தான் இதை மாற்றி சமுதாயத்தை சீராக்குவார் என்று பார்ப்போம்
—————————————–நன்றி—————————————————-


