சில நிதர்சனங்கள்
உலகம் எதிர்மறைக்கருத்துக்களை விரும்பினாலும் அது தன்னை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்கிறது
நிகழ்காலத்தை பற்றி சிந்திப்பவனால் எதிர்காலத்தை அடையமுடியாது
உண்மை கசக்கும்
உங்கள் மனம் கண்ணாடி போன்றது மனதிற்குள் எவ்வாறு நினைக்கிறீர்களோ அதுபோலவே வெளியில் உள்ள உலகம் உங்களுக்கு தோன்றும்
மனதை சுத்தமாகவைத்துக்கொள்ளுங்கள்
மனம், உடல், மூளைக்கு பசிக்கும் போதே தீனிபோடவேண்டும்
நாளை பற்றிய பயம் இன்று உங்களை கொள்ளும்
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ மூளையில் எதை விதைக்கிறீர்களோ அதுதான் உங்கள் வாழ்க்கையை கட்டமைக்கும்
உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் உலகம் எந்நேரமும் தோன்றும் கருத்துக்களை சொல்லிக்கொண்டேதான் இருக்கும்
கஷ்டம்வ்ரும் வரும்பொழுது கடவுளை நாடினால் போதும் மற்றநாட்களில் மனதை கோயில் ஆக்குங்கள்
புத்தகத்தை படிப்பதை விட மனிதர்களை படிப்பது கடினம்
தத்துவங்கள் ஆயிரம் கூறினாலும் நிகழ்காலத்திற்கு ஒவ்வாதத்தை செய்யாதீர்கள்
இறைவன் இருக்கிறாரோ இல்லையோ இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள்
நீங்கள் நேர்மறை சிந்தனையுடன் உலகத்தை பார்த்தால் இங்கு வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன
பணம் வேண்டும் ஆனால் அதுவே எல்லாம் இல்லை
காரியம் முடிந்தவுடன் யாரையும் கழட்டிவிடாதீர்கள் அது ஒரு பாவச்செயல்
சுயநலம் உள்ள மனிதன் மற்றவர்களிடம் குற்றம் கண்டுகொண்டே இருப்பான்
உலகத்தை விசால பார்வையில் பார்த்தால் மனதை தானாக விரவாகும்
மக்கள் உங்கள் வார்த்தைகளை விட செயல்களையே கவனிப்பார்கள்
மேலும் சில அடுத்த பதிவில்………….


