ஏன் உண்மையை பேச வேண்டும்
ஏன் உண்மையை பேச வேண்டும்,
நீ உண்மையை பேசினால் மட்டுமே உன்னுடன் பேசுபவர் பொய் பேசினாலும் அவர் தன்னிலை மறந்து சில உண்மையை பேசுவார்
உண்மையை பேசினால் தெளிவாக சிந்திக்க முடியும்
ஆரம்பத்தில் வெறுக்கப்பட்டாலும் அவர்களின் மனதில் நீ கூறும் கருத்து பதிந்துவிடும்
உண்மை ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது அது பொய்க்கு இல்லை
உண்மை உன்னை வாழ விடாது என்றாலும் அது உன்னை சாக விடாது
உண்மை உன்னை சிந்திக்க வைக்கும்
உண்மை உன்னை கேள்வி கேட்க வைக்கும்
நீ உண்மை பேசினால் தான் பிறர் என்ன நினைக்கிறார் என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்
நீ ஒருவனை பொய் சொல்லி ஏமாற்றும் பொழுது மற்றோருவன் உன்னை ஏமாற்றுவது உனக்கே தெரியாது
நீ கலை இலக்கியம் இவைகளை உன் கற்பனைக்குள் ஓட விட்டு ரசிக்கலாம்
மனம் எளிதாகும்
வாழ்க்கையும் எளிதாகும்
உன்னிடம் காலமும் பயப்படும்
உண்மை சொல்பவர்கள் வாழ்ந்த பின்னும் மதிக்கப்படுவர்


