இது ஒரு மழை காலம்

rainy-season இது ஒரு மழை காலம்

அருண் ஒரு சோம்பேறி கொரோனா அவனை மேலும் சோம்பேறி ஆக்கிவிட்டது அவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான் குளிப்பதால் இருந்து பள்ளி செல்லும் வரை அனைத்திலும் அவன் அப்படி தான்.

பள்ளி திறந்தது என்னமோ நவம்பர் ஒன்றாம் தேதி ஆர்வமிகுதியால் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வேகமாக சென்றான் வழக்கம் போல் அதிக வீட்டு பாடம் கொடுக்கப்பட்டது வீட்டுக்கு முணுமுணுத்து கொண்டே வந்தான் அந்த டீச்சரை எண்ணி சாபம் விட்டுக்கொண்டே வந்தான்

பள்ளி இடிந்து விழவேண்டும் அதுபோல் மழை ஏன் இரவில் மட்டும் வருகிறது பகலில் வந்து தொலைந்தால் என்ன அப்படியே வீட்டுக்கு வந்து ஸ் இருந்தான்.

இரவு முழுதும் மழை பெய்து கொண்டே இருந்தது அந்த மழை பகலிலும் நீடிக்க வேண்டும் என்று வேண்டாத தெய்வங்களே இல்லை

துரதிர்ஷ்டமாக மழை நின்று விட்டது பள்ளிக்கு விடுமுறையும் அறிவிப்பும் வரவில்லை சோகத்துடன் பள்ளிக்கு சென்றான்

பாடம் எழுதிவராததால் பள்ளி வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டான் பின்பு ஆசிரியரிடம் புலம்பிக்கொண்டே கேட்டான் எப்பொழுதும் மழை ஏன் நம்ம ஊர்களில் இரவில் மட்டும் வருகிறது பகலில் வருவதில்லை என்று

பிறகு உண்மையை கூறினார் ஆசிரியை அவனை உள்ளே அழைத்து அணைத்து மாணவர்கள் முன்னாள் விளக்கத்தை கூறினார் இந்தியா போன்ற நாடுகள் வெப்ப நாடுகள் இங்கு பூமி பகல் பொழுதில் சூடாகவும் இரவு மட்டும் குளிர்ந்தே காணப்படும் அதனால் காற்றில் ஈரப்பதம் குறைந்து உள்ளதால் மழை பெரும்பாலும் இரவில் பொழியும் ஆனால் குளிர் பிரதேச நாடுகள் அப்படி இல்லை

அருண் முணுமுந்துகொண்டே அடுத்த ஜென்மத்தில் ஐரோப்பாவில் பிறக்கவேண்டும் என்று சொன்னான்

——————————————–நன்றி—————————————————————-

You May Have Missed