காற்றுக்கு எதிர் திசையில் செல்

உணக்கு வெற்றி வேண்டுமா தோல்வி வேண்டுமா எது வேண்டும் என்றாலும் காற்றுக்கு எதிர் திசையில் செல் அதுவே வெற்றிக்கான முதல் திட்டம் , இங்கு நல்லவன் கெட்டவன் என்பது எல்லாம் சமூகத்தின் தேவையை பொறுத்தே தேவை பட்டால் நல்லவன் தேவைப்படாவிட்டால் கெட்டவன் அவ்வளவுதான்
ஆனால் உனக்கு வெற்றிவேண்டுமா அனைவரும் செய்வதற்கு எதிராக வேலை செய் அனைவரும் நல்லவனாக இருக்கும் போது நீ கெட்டவனாய் இரு அனைவரும் கெட்டவனாக இருக்கும் போது நல்லவனை இரு அப்படி இருக்க முயற்சிக்கும் போது போராட்டம் கடுமையாக இருக்கும் நீ உன் எண்ணம் செயல் முயற்சி இவற்றின் மீது நம்பிக்கை வைத்து விளையாடு
சமூகம் என்றுமே குறை சொல்லிக்கொண்டுதான் இருக்கும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாதே அந்த குறைகள் உன் கண்முன்ப்பட்டால் அந்த குறையை நிவர்த்தி செய் அதன் பலனை அனுபவி இப்படி இருந்தால் மட்டுமே சமூகத்தை எடுத்து செல்ல முடியும் இங்கு குறை காண்பவர்கள் அந்த குறைகள் அவர்களிடம் இருபத்தினால்தான் மற்றவர்களிடம் காண்கிறார்கள் அவர்களை பற்றி கொள்ளாதே
இறைவன் விரும்புவதெல்லாம் உனக்கு உன்னை படைக்கப்பட்ட நோக்கத்தை கண்டு அதை நோக்கியே நீ செல் இங்கு யாரும் மற்றவர்களை அவர்களுக்கான தேவை இன்றி சிந்தித்து கொண்டு இருக்க மாட்டார்கள் நீ உன்வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடு அடுத்தவர் எப்படி போனால் உனக்கு என்ன அது அவர்களின் பிரச்னை சமூகத்தில் பிரச்னை என்றால் மட்டுமே நீ வருத்தப்படவேண்டும் ஏன் என்றால் அது ஒரு நாள் உன்னையும் உன் குடும்பத்தை ஒரு நாள் பாதிக்கும் அவ்வளவுதான்.
நீ வாழு மற்றவரை வாழவிடு அவ்வளவுதான்
—————————————–நன்றி———————–


