எதிர்காலத்தில் எந்த எந்த துறைகள் எப்படி இருக்கும் சற்று அறிவியல் பூர்வமாக சிந்தித்து பார்ப்போம்

saveaiaai-1024x535 எதிர்காலத்தில் எந்த எந்த துறைகள் எப்படி இருக்கும் சற்று அறிவியல் பூர்வமாக சிந்தித்து பார்ப்போம்

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்களை உணர்ந்துகொள்ளவும் உங்கள் திறமைகளை தெரிந்துகொள்ளவும் அணைத்து துறையினருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் இவை இரண்டுமே எளிய வழியில் கிடைக்கிறது ,இதை நாம் பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்து நாள் அடைவில் அதையே தொழில் ஆக மாற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் உங்களை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் இந்த ஒரு துறையில் தான் வாய்ப்பு அதிகம் என்று எல்லாம் சொல்ல முடியாது எல்லா துறையிலும் சவால் உள்ளது முதலில் உங்கள் குணங்களை சோதனை செய்து கொள்ளுங்கள் தற்பொழுது உள்ள காலத்தில் என்ன தான் திறமை இருந்தாலும் குணம் மற்றும் பண்பு , பணிவு நன் நடத்தை இவை எல்லாம் இல்லாவிட்டால் வேறுவொருவரால் எளிதில் நோட்டமிடபடுவீர்கள்.

நீங்களே வேண்டும் என்றால் பாருங்கள் அதிகம் படித்து அதிகம் மதிப்பெண் எடுத்து திறமையுடன் இருப்பவர்கள் ஒரு சிறிய வளர்ச்சிக்கு மேல் மேலே செல்ல முடியாமல் இருப்பார்கள் அதற்க்கு காரணம் அவர்கள் புத்தக கல்வியை மட்டுமே கற்றதினால் சிறிய வயதில் நிறைய போராட்டங்கள் மற்றும் கஷ்டங்களை கண்டு அதிர்க்கு பயப்படாமல் துணிந்து எதிர்கொள்பவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் எளிதான முறையில் முன்னேறுவார்கள் காரணம் அவர்கள் வகுத்து கொண்ட யுக்திகள் நீங்கள் திறமை அறிவு எது இருந்தாலும் உங்கள் யுக்தி வகுத்து கொண்டும் மாற்றி கொண்டே இருக்க வேண்டும் ஆனால் அதனால் மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்.

இன்று ஒருவருக்கு உதவிய யுக்தி மற்றவருக்கு உதவாமல் போகலாம் அதுவே உங்களுக்கே இன்னொரு தருணத்தில் உதவாமல் போகலாம் அதனால் நீங்கள் அதற்க்கு உங்களை பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எது வெல்லும் உங்களால் முடியும் முடியாது என்பதை அடிக்கடி பரிட்சயம் செய்து பார்க்க வேண்டும் அதற்க்கு உங்களின் முயற்சிகளில் நீங்கள் பலமுறை தோல்வி பெற்று இருக்க வேண்டும் அல்லது உங்களிடம் விட முயற்சி இருக்க வேண்டும்.

அதற்கு இன்றையகாலத்தில் நிறைய வாய்ப்புகள் உள்ளது ஆனால் சில அடிப்படை குணங்ககளான பரந்த மனது தொலைநோக்கு பார்வை தொழில்நுட்ப அறிவு கற்று கொள்ளும் ஆர்வம் அந்த தொழிலின் மீதான ஆர்வம் நேர்மை பக்தி மேலும் பல அடிப்படையான குணங்களை பெற்றிட வேண்டும்.

இனி எதிர்காலத்தில் எந்த தொழிலாக இருந்தாலும் மற்ற தொழில் ஐ விட குறைவானது என்று இல்லை எல்லாம் தொழிலிலும் வருமானம் ஒன்றே அதில் புதுமையை புகித்தினால் வருமானத்தை பெருக்கலாம் இதுவே எனது அனுபத்தில் கிடைத்தவை.

நல்ல எண்ணம் நல்ல மனிதர்களை உருவாக்கும் நல்ல மனிதர்கள் நல்ல சமூகத்தை உருவாக்குவார்கள்

——————————நன்றி ———————-

You May Have Missed