பணத்தின் விதி

எல்லாவற்றிற்கும் விதி இருப்பது போல் பணத்திற்கும் விதியிருக்கிறது , நீங்கள் சில நாடுகளை உற்று பார்த்து இருக்கிறீர் என்றால் எந்த ஒரு நிறுவனமோ அல்லது தனி நபரோ திடீர் என்று மற்றவரை பின்தள்ளி உயருவதில்லை.

அங்குள்ள மக்கள் உயரவோ, தாழ்ந்து போகவோ, அரசாங்கம் சிலகொள்கைளை பின்பற்ற வேண்டும் அல்லது தளர்த்தவேண்டும் அப்பொழுதுதான் அந்த சமூகத்தின் கண்ணோட்டம் நிலைப்பாடும் மாறும்.

தற்பொழுது ஏற்பட்டு இருக்கும் பொருளாதார மந்தநிலை என்பது அனைவரையும் சீராக நிலைகுலைய செய்து உள்ளது இதுவே recession குள்ளே செல்கிறது என்றால் பலரின் வேலைவாய்ப்புக்கள் காலியாகும் மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.

ஆனால் நீங்கள் வங்கியில் பணம் போட்டுவைத்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் பணமும் காலியாகிவிடும் இது சற்று வியப்பை ஏற்படுத்தலாம் ஆனால் இது தான் உண்மை.

வங்கி என்பது ஒரு இடைத்தரகர் மட்டும் இன்றி வேறெதுவும் இல்லை , வங்கி என்ன செய்கிறது பணத்தை வாங்கி, கடன் கேட்பவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கிறது பொருளாதார மந்தநிலையால் பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் வங்கி என்னசெய்யும் சரி ரெசிசஸின் வருகிறது என்றால் என்ன பாடு பட்டாலும் கடன் வாங்கியவர் வங்கிக்கு எப்படி திரும்ப செலுத்த முடியும்.

அந்த பணம் இல்லாததால் வங்கியும் திவால் ஆகிவிடும் பணம் போட்டவருக்கும் சிறுதளவு நஷ்ட ஈடு தான் கிடைக்கும். இது தான் பணத்தின் விதி உங்களை சுற்றியுள்ள அனைத்தும் செழிப்புடன் இருந்தால் தான் நாமும் செழிப்புடன் இருக்க முடியும்.

எவ்வளவு தான் பணம் வைத்து இருந்தாலும் நம் தேவைக்கு என்றும் நம் அத்தியாவிசிய செலவுக்கு என்று உள்ள பணமே, நமது பணம். மற்ற அளவுகொண்ட பணம் நீங்கள் எவ்வளவு தான் சேர்த்து நிலமாகவோ தங்கம்மாவோ பத்திரமாகவோ மற்றும் பலவழிகளில் நீங்கள் சேமித்துவைத்து இருந்தாலும் அது சமுக்கத்தின் பணம்.

அதனால் அனைவரும் நம் சுயநலத்துக்கேனும் சமூக முன்னேற்த்திற்கு பாடு படுவோம்.

வாழ்வு செழிக்கட்டும் மக்கள் வளரட்டும்.

—————————–நன்றி மீண்டும் சந்திப்போம்————————-

You May Have Missed