அதே கண்கள்

அருண் க்கு தற்போது வயது 35 , பெங்களூரு வில் இருந்து சென்னை க்கு மாற்றம் ஆகியிருந்தான் . அருண் நல்ல புத்திசாலி அருணின் மகள் ஸ்ரீதேவி யும் அப்படிதான் .
அருண் க்கு 28 வயதில் திருமணம் ஆனது வள்ளி என்ற பெண்ணை மணந்தான் . வள்ளியும் பார்ப்பதற்கு அழகானவள் குணத்திலும் தங்கம் இருவர்க்கும் பெற்றோர் நிச்சியக்கப்பட்டு திருமணம் நடந்தேறியது .
வள்ளியும் , அருணும் பெங்களூருவில் குடியேறினர் , இனிதாய் போய்க்கொண்டு இருந்த வாழ்க்கையில் திடீர் என அந்த கோர விபத்து நேர்ந்தது , வள்ளி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டால் . துக்கத்தில் இருந்த அருணுக்கு பெற்றோர் ஆறுதல் கூறி சென்றனர் . அலுவுலகத்தில் பணியிடம் மாற்றம் பெற்று வந்தான் .
வந்த இடத்தில திகிலென நடந்தது அந்த சம்பவம் அருண் க்கு உதவியாளராக நியமிக்க பட்ட பெண் கார்முகிழி பார்ப்பதற்கு வள்ளி போன்றே இருந்தால் . அவளை பார்க்கும் போது எல்லாம் வள்ளி நினைவே வந்து விட்டு சென்றது அவனுக்கு .
முதலில் அவளிடம் பேசவே தயங்கியவன் , பின்பு காதலையே சொல்லிவிட்டான் . அவள் ஆரம்பத்தில் வேண்டாம் என்று சொன்னாலும் அவனுடைய அழகிய குணத்தை பார்த்து சம்மதம் தெரிவித்து விட்டால் .
இனிதே திருமணம் நடந்து அருணும் , கார்முகிழி யும் ஒன்றாக அவன் மகள் ஸ்ரீதேவி யுடன் ஒன்றாக வாழ்ந்தனர் .
இனிதே சென்றது குடும்பம் ..


