எல்லாம் ஒரு வட்டம் தான்
உலகம் யாரை பின்பற்றி நடந்துகொண்டுஇருக்கிறது இருக்கிறது என்று கேட்டால் நிச்சயம் அது சாதனையாளர்கள், பேச்சையோ அல்லது வெற்றி பெற்றவர்கள் பேச்சையோ கேட்டு நடந்துகொள்ளவில்லை
அது பெருபான்மை மக்களின் எண்ணங்களை நோக்கியே நகர்ந்து கொண்டு உள்ளது கனவுகாண்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுவதில்லை ஏன் எண்ணில் எந்த கனவு சாத்தியம் எது சாத்தியமற்றது என்று யாருக்கும் தெரியாது
பெரும்பான்மையான மக்கள் எதை நோக்கி ஈர்க்கப்படுகிறார்களோ அதனையே இந்த உலகம் செய்யும் அதை கனவுகாண்பவன் தந்த கனவிற்கு தலைவன் ஆகிறான்
உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள் இன்று இத்தனை வசதிகள் இருக்கும் பொழுது ஒரு இணையத்தளம் தொடங்குவது எளிது ஆனால் நாளை பற்றி சிந்தித்த சில மனிதர்கள் அதுநடக்குமா நடக்காத என்ற காலத்திலேயே அதை நம்பி முதலீடு செய்து உள்ளனர்
இது போல் அணைத்து தொழில்களும் பெருபான்மையான மக்கள் எதை நோக்கி செல்கிறார்க்ளோ அதில் செல்ல வேண்டும் ஆனால் அதை நீங்கள் முன்னயே செய்ய முடியும் என்றால் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள்
உண்மையான சில விஷயங்கள் நடக்கவேண்டும் என்றால் அந்த விஷயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை விடாமுயற்சி நேர்மை இவை எல்லாம் ஆழ்மனதில் இருந்து இயற்கையின் தயாரிப்பாக வடிவெடுக்க வேண்டும் அது எல்லாம் இருந்தால் அது பரிசுத்த ஒன்றாகவும் மக்களால் ஏற்றுக்கொள்ளும் ஒன்றாகவும் இருக்க முடியும்
மக்கள் சிலகாலம் ஏமாறுவார்கள் எல்லாக்காலமும் இல்லை
ஆனால் மக்களின் விருப்பங்களும் கனவுகளும் மாறிக்கொண்டே இருக்கும் இன்று அழியும் தொழிலோ அல்லது உயிரனமோ நாளை இல்லாமல் போகலாம் பிறகு காட்சி பொருளாகலாம் ஆனால் சிலகாலம் கழித்து அது மீண்டும் மற்றோரு பரிணாமம் எடுத்து அதுவே பெருன்பான்மையானதாக மாறிவிடும் இது கடவுளின் செயல் இல்லை எது இயற்கையின் நீதி
பெருமணமாய் உள்ள மக்களே உலகை நகரத்துகிறார்கள் இவர்கள் செய்யும் புண்ணியங்களும் பாவங்களும் உலகசுற்றி நடக்கும் மாற்றங்களுக்கு வித்ததாகிறது
நீங்கள் தொழிலோ அல்லது வாழ்க்கையோ இதில் முடிவு எடுக்க வேண்டும் என்றால் அதாவது நம்வசதிக்கு உள்ள தொழிலை தேர்ந்தெடுக்கவேண்டும் என்றால் பெருன்பான்மையான மக்கள் எதைநோக்கி செல்வார்கள் என்பதை முன்னோக்கி கணிக்கத்தெரிந்தால் அதில் தலைவன் ஆகலாம்
பழையதோ புதியதோ மாறிக்கொண்டேதான் இருக்கும் இல்லை என்றால் அறிவியலும் தொழிலும் பொருளாதாரமும் ஏன் மக்களும் செத்துவிடுவார்கள்
——————————————–நன்றி———————————–


